• Jan 19 2025

ஆண்ட்ரியா காரை விடாமல் துரத்திய ரசிகர்கள்... உடனே காப்பாற்றிய போலீசார்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் புதுச்சேரியில் ஆண்டுதோறும் காரைக்காலில் கார்னிவெல் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழாவில் நடிகையும் பிரபல பாடகியுமான ஆண்ட்ரியா கலந்துகொண்டார். அப்போது எதிர் பாராத விதமாக அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.


கார்னிவெல் விழா நிகழ்ச்சி முடிந்ததும் புறப்பட்ட ஆண்ட்ரியாவின் காரை மறைந்து ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றனர். உடனே போலீசார் அவரை சிரமத்திற்கிடையே பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ரசிகர்கள் ஆர்வத்தில் ஆண்ட்ரியாவின் காரை விடாமல் துரத்தி சென்றனர். இதனால் தான் பகுதியே பரபரப்பானது.


மேலும் விழா முடிந்து ஒரே நேரத்தில் கூட்டம் முண்டியடித்து சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மக்கள் ரயில்வே கடக்கும் போதும் சென்னை ரெயில் வந்தது. அந்த சமயத்தில் மக்கள் தண்டவாளத்தின் நடுவே பலரும் சிக்கி கொண்டனர்.


அதனால் மீண்டும் ரயில்வே கேட் உயர்த்தப்பட்டதால் மக்கள் வேகம் வேகமாக அங்கு இருந்து கிளம்பினார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் கொஞ்சம் நேரம் பதற்றம் நிலவியது.  

Advertisement

Advertisement