• Sep 17 2024

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரபல காமெடி நடிகர்-கட்டாய ஓய்வில் இருக்க வலியுறுத்திய மருத்துவர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல்யமானவராக வலம் வருபவர் தான் காமெடி நடிகர் வெங்கல் ராவ். சினிமா வாழ்க்கையில் 25 வருடமாக சண்டை பயிற்சியாளராக இருந்த இவர் “காமெடி ஆம் புலிகேசி” படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.

ஆந்திராவை சேர்ந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பணக்காரன், ராஜாதி ராஜா போன்ற படங்களில் ஃபைட்டராக இருந்தார். மேலும்,பாலிவுட் ஸ்டார் அமிதாப், தர்மேந்திரா உள்பட பலருக்கும் டூப் போட்டுள்ளார்

மேலும் இவர் சினிமாவில் கால் பதிக்க முதல் கோவில் திருவிழாக்களில் கம்பு சுற்றி அதன் மூலம் வருமானம் ஈட்டினார். அதன் பின்னர் தான் இவர் சினிமாவில் சண்டை கலைஞராக சேர்ந்தார். ஃபைட்டராக இருந்த வெங்கல் ராவ், 'நீ மட்டும்' என்ற படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.

இவர் வடிவேலுவுடன் இணைத்து மொத்தம் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சிறுநீரகப் பிரச்சினை காரணமாக விஜய வாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

தற்போது இவர், குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். இதுபற்றி அவர் தரப்பில் விசாரித்தபோது, சிகிச்சை முடிந்து அவர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார் என்றும் மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்க வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement