• May 09 2024

செம்பருத்தி சீரியலில் புதிதாக களமிறங்கிய பிரபல நடிகை.. யார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவரும் விதமாக ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் பல சீரியல்கள் ஒளிபரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ஷு தமிழில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் செம்பருத்தி.

கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை ஷபானா, செம்பருத்தி சீரியல் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில், விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் வழக்கறிஞராக களமிறங்கியுள்ளார் நடிகை நிஷா.

நடிகர் கணேஷ் வெங்கட்ராமை திருமணம் செய்துகொண்ட பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த நடிகை நிஷா, தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/TgAuqTJfNt0


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement