• May 08 2024

முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் பிரபல நடிகை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரனுடன் இணைந்து ஆர்ச்சர்யா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

எனினும் இதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்துள்ளார் பூஜா ஹெக்டே.

இந்நிலையில், தற்போது நடிகை பூஜா ஹெக்டே அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் சென்சேஷன் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது.

விஜய் தேவரகொண்டா மற்றும் பூஜா முதல் முறையாக ஜோடியாக இணையும் இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement