• May 02 2024

இதெல்லாம் கண்டிப்பா ஓடாது இயக்குநரே சொன்னாரு..சூரியவம்சம் படம் குறித்து சரத்குமார் ஒபன் டாக்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார், நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் சமீபத்தில் நடித்தார். இந்த நிலையில், சரத் தனது சூரிய வம்சம் படம் குறித்த பல சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதாவது சூரிய வம்சம் படத்தை நாங்கள் எடுத்து முடித்த பிறகு, செய்தியாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்காக ஒரு காட்சி போட்டுக் காட்டினோம்.

அப்போது பிரபல இயக்குநர் ஒருவர் அந்த படத்தை பார்த்துவிட்டு, இயக்குநர் விக்ரமன் மற்றும் என்னிடம் வந்து, என்ன படம் எடுத்து வச்சிருக்காங்க இதெல்லாம் கண்டிப்பா ஓடாது? என தெரிவித்தார். அப்போது, அவர் கூறியதை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

ஆனால் ரசிகர்களிடம் இதற்கான, ரிப்ளை என்பது வேற மாதிரி வந்தது. கிட்டத்தட்ட படம் 200க்கும் மேற்பட்ட நாட்கள் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 

எனவே  படம் என்பது வெற்றியடைவது ரசிகர்கள் கையில் தான் உள்ளது, வேறு யார் சொல்வதையும் இந்த விஷயத்தில் நம்ப கூடாது என உருக்கமாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement