• Sep 30 2023

பிரபல நடிகரின் மனைவி திடீர் உயிரிழப்பு... இன்பச் சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த பரிதாபம்... அதிர்ச்சியில் திரையுலகம்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

கன்னடத் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய ராகவேந்திரா. இவர் 26 ஆகஸ்ட் 2007 அன்று போலீஸ் அதிகாரி சிவராமின் மகள் ஸ்பந்தனாவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.

இவரின் மனைவி ஸ்பந்தனா 2016-ஆம் ஆண்டு வெளியான 'அபூர்வா' என்ற திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்தத் தம்பதியினருக்கு சௌர்யா என்ற மகன் உள்ளார். 


இந்நிலையில் விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா ராகவேந்திரா பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அதாவது தாய்லாந்துக்கு இன்பச் சுற்றுலா சென்றிந்த வேளையில் அங்கு ஸ்பந்தனா உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. 

இத்தம்பதியின் 16வது திருமண நாளுக்கு இன்னும் 19 நாட்களே இருக்கும் நிலையில் இவர் உயிரிழந்துள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரின் மறைவிற்குப் பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement