• May 01 2024

விஜய்68 படப்பிடிப்பிற்காக தாய்லாந்துக்குச் சென்ற படக்குழு- வெளியாகிய சூப்பர் அப்டேட்

stella / 5 months ago

Advertisement

Listen News!


விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு வந்து விஜய் ரசிகர்களை ரொம்பவே திருப்திப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் பொதுவான ரசிகர்களோ படம் தங்களை கவரவில்லை ஏகப்பட்ட தவறுகள் படத்தில் இருக்கின்றன என கூறுகின்றனர்.

படம் வெளியாகி முதல் நாளில் 148 கோடி ரூபாயை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. அதனையடுத்து முதல் வாரத்தின் முடிவில் 460 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

லியோ ரிலீஸுக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படம் தொடர்பான பணிகள் மும்முரமடைந்துள்ளன. படத்தின் பூஜை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.


அண்மையில் இப்படத்தின் பூஜை வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல் உள்ளிட்டோர் கமிட்டாகியிருக்கிறார்கள் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தளபதி 68 பூஜையில் அவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் படத்தின் அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக படக்குழு தாய்லாந்துக்கு பறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தளபதி ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement