• May 18 2024

அவதார் பாகம் 2 திரைப்படத்தின் லேட்டஸ்ட்டான புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு-எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அளப்பறிய கற்பனையில் உருவாகி உலகையே அசர வைத்த படம் தான் அவதார். இப்படத்தின் முதல்ப்பாகமானது கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே சுமார் 25 ஆயிரம் கோடி வசூலையும் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில் இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது. ஆக்ஸிஜனே இல்லாத பாண்டோராவில் ஓ2 கலவையான தண்ணீர் எங்கே இருந்து வந்தது என்கிற கேள்விக்கெல்லாம் விடை சொல்லாமல் முதல் பாகத்திலேயே அருவியில் இருந்து குதிக்கும் காட்சிகளை வைத்து அந்த நாவி இன மக்களுக்கு தண்ணீர் இருக்கு, அங்கே மரங்கள் வளர்கிறது என்கிற கதையை சொல்லிவிட்ட ஜேம்ஸ் கேமரூன், இரண்டாம் பாகத்தையே தி வே ஆஃப் வாட்டர் என இயக்கி உள்ளார்

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவதார் உலகத்திலேயே தன்னை 13 ஆண்டுகள் அர்பணித்து விட்டார். ஜேக் சுல்லி, நெய்த்ரி கதாபாத்திரங்களில் நடித்த சாம் வொர்த்திங்கடன் மற்றும் ஜோ சால்டனாவும் இன்னமும் அதே மிடுக்கோடு அவர்கள் நாவிக்களாக இந்த படத்தில் எப்படி நடித்து அசத்தி உள்ளனர் என்பதை பார்க்கவே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

உலகளவில் 200க்கும் மேற்பட்ட மொழிகளில் அவதார் 2 திரைப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட ஜேம்ஸ் கேமரூன் திட்டமிட்டுள்ளார். அப்படி வெளியாகும் பட்சத்தில் 30 ஆயிரம் கோடிக்கு மேல் அடுத்த இலக்கை நிர்ணயித்து விடுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அவதார் 2 படத்தை தொடர்ந்து 3 மற்றும் 4ம் பாகங்களும் விரைவில் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement