• Apr 27 2024

'வாரிசு' படத்தை மொத்தமாக வாங்கிய நிறுவனம்; அடடே அது இவங்க தானா?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாத் திரையுலகில் 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் தளபதி விஜய். இவரது நடனத்திறமையாலும் நடிப்புத் திறமையாலும் தமிழகத்தில் மட்டுமன்றி உலகமெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து உள்ளார்.

எல்லாருமே வியக்கும் வகையில் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்றவாறு தன்னை மாற்றியமைத்து அந்தக் கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் திறமை இவருக்கு உண்டு. அதாவது நகைச்சுவை கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, ஆக்சன் படமாக இருந்தாலும் சரி, குடும்ப சென்டிமென்ட் ஆக இருந்தாலும் சரி எதிலுமே இலகுவாகவும் இயல்பாகவும் நடிக்கக் கூடிய ஒருவராக விளங்குகின்றார்.

'நாளைய தீர்ப்பு' படத்தில் அறிமுகமானது தொடக்கம் 'பீஸ்ட்' திரைப்படம் வரை இவர் நடித்த படங்கள் எண்ணிலடங்காதவை. இதனைத் தொடர்ந்து இவர் தற்போது நடித்து வரும் படம் 'வாரிசு'. இப்படத்தினை பிரபல இயக்குநரான வம்சி இயக்கியுள்ளதோடு, இப்படத்தின் கதை முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கதையாகவும் அமைந்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய்யின் 66-ஆவது படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரியளவிலான எதிர்ப்பார்ப்பு கிளம்பி உள்ளது. இதற்கான காரணம் என்னவெனில் அவரது கடைசி படம் 'பீஸ்ட்' சரியான விமர்சனம் மற்றும் பெரியளவிலான வசூலை பெறவே இல்லை என்பதாகும்.

இதனால் தளபதி ரசிகர்கள் 'வாரிசு' படம் ஆவது நன்றாக இருக்க வேண்டும், பெரியளவிலான வசூல் வேட்டையினை நடத்த வேண்டும் என வேண்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. அதையே ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி இருந்தார்கள்.

இவ்வாறாக தளபதியின் 'வாரிசு' படம் இந்த வருடத்தில் வெளியாகிவிடும் எனத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இப்படத்தினுடைய வியாபாரம் குறித்து சூடான தகவல் ஒன்று வெளி வந்துள்ளது. அதாவது 'வாரிசு' படத்தின் மொத்த வியாபாரத்தையும் T Series பெற்றுக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement