• May 07 2024

ஹீரோயினாக அறிமுகமாகும் குழந்தை நட்சத்திரம்.. அதுவும் இந்தப் படத்திலா..? மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா. அதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார். இதில் சிறப்பாக தனது நடிப்பினை வெளிப்படுத்தி  இருந்தமையினால் தொடர்ந்து 'விஸ்வாசம்', 'மாமனிதன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் 'கண்ணானே கண்ணே' பாடலின் மூலம் பல ரசிகர்களின் மனங்களை கவர்ந்து இழுத்திருக்கின்றார்.



மேலும் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த 'என்னை அறிந்தால்' திரைப்படமானது கவுதம் மேனன் இயக்கி திரைக்கு வந்திருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அமோக வெற்றியடைந்தது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அனுஷ்கா, விவேக், அருண் விஜய், த்ரிஷா என பல நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்திருந்தார்கள். இதில் அஜித்தின் மகளாகவே அனிகா நடித்திருந்தார்.



'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அனிகாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. இதை தொடர்ந்து தமிழ், மலையாளம் என இரு திரையுலகிலும் பிஸியான ஒரு குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி வந்தார். 



இந்நிலையில் தற்போது இவரை பற்றி ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது இதுவரை காலமும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா மலையாள சினிமாவில் உருவாகவுள்ள 'ஓ மை டார்லிங்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் மெல்வின் ஜி பாபு, முகேஷ், லீனா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். அதுமட்டுமல்லாது ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். 



இப்படத்தின் உடைய பூஜையானது சமீபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த செய்தி இவரின் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்திருக்கின்றது. அதுமட்டுமல்லாது கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை அனிகாவிற்கு "இதனைத் தொடர்ந்து மேலும் மேலும் பல பட வாய்ப்புக்களும் கிடைக்க வேண்டும்" எனக் கூறி ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

Advertisement

Advertisement

Advertisement