• May 19 2024

என்னுடைய கெரியரில் மிகப் பெரிய தோல்வி சமந்தாவின் சகுந்தலம் தான்- மனம் நொந்து பேசி தில் ராஜு

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தான் தில் ராஜு. இவர் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு என்னும் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகினார். இப்படத்திற்காக இவர் கொடுத்த பேட்டிகள் இணையத்தில் வைரலாகின.

வாரிசு படத்திற்கு பிறகு சமந்தாவின் சகுந்தலம் படத்தை அவர் தயாரித்து இருந்தார். அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.சகுந்தலம் படத்தை தயாரித்ததால் 20 கோடி அளவுக்கு தில் ராஜுவுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அது பற்றி ஒரு பேட்டியில் பேசிய தில் ராஜு தனது கெரியரில் இது மிகப்பெரிய தோல்வி படம் என கூறி இருக்கிறார்.


"நான் தயாரித்த 50 படங்களில் வெறும் 4 அல்லது 5 படங்கள் தான் தோல்வி அடைந்து இருக்கின்றன. சகுந்தலம் படம் சமீபத்தில் பெரிய jerk."நான் ஒப்புக்கொள்கிறேன். நான் நம்பினேன். ஆடியன்ஸுக்கு பிடித்தால் அவர்கள் படத்தை ப்ளாக்பஸ்டர் ஆகிவிடுவார்கள். ஆனால் பிடிக்கவில்லை என்றால் misfire ஆகிவிடும். அதன் பின் என்ன தவறு ஆனது என்று தான் பார்க்க வேண்டும்" என தில் ராஜு கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement