• May 19 2024

கமலின் திரை வாழ்க்கையில் நடந்த மாபெரும் சாதனை.. தமிழகத்திலா..கொண்டாடி வரும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா ரசிகர்களை தனது படங்கள் மூலம் நிறைய கற்றுக் கொடுத்தவர்.புது புது விஷயங்களை அந்த காலத்தில் இருந்தே தனது படங்களில் வைத்து வந்தார்.மேலும் அவர் ஒரு பல்கலைக்கழம் என பலர் கூற நாம் கேட்டிருப்போம்.தமிழ் சினிமாவில் சில வருட கேப் பின்னர் படம் நடித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

லோகேஷ் இயக்கத்தில் ராஜ் கமல் தயாரிப்பில் வெளியான இன்று வெளியான திரைப்படம் தான் விக்ரம்.

இந்தப்படத்தில் கமல் மற்றும் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்துள்ள விக்ரம் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றது..

இந்நிலையில், உலகநாயகன் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் தான், கமலின் திரை வாழ்க்கையில் தமிழகத்தில் அதிக வசூல் செய்துள்ள திரைப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதன்முலம், இதற்குமுன் இருந்த தன்னுடைய அனைத்து படங்களின் சாதனையை விக்ரம் முறியடித்து, ஆல் டைம் ரெகார்ட் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement