• May 05 2024

பிக்பாஸ் வீடு மட்டும் இரண்டு இல்லையாம், பிக்பாஸும் இரண்டு தானாம்- ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த டுவிஸ்ட்

stella / 8 months ago

Advertisement

Listen News!

 டிவி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போரின் விருப்பமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருந்து வருகிறது. வெளிநாடுகளிலும், இந்திய மொழிகளில் இந்த மாடல் நிகழ்ச்சிகள் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தமிழிலும் 6 சீசன்களாக இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். வரவிருக்கும் 7 ஆவது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டு ப்ரோமோக்கள் வெளிவந்துள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்கள் யார் என்கிற விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அதுகுறித்த தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.


மேலும்இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக மாகாபா ஆனந்த் கலந்து கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகின்றது.அத்தோடு இந்த முறை பிக்பாஸ் வீடு இரண்டு வீடாக இருக்கப் போகின்றது என்ற அறிவிப்பானது ப்ரோமோவிலேயே வெளியாகியிருந்தது.

இதனை அடுத்து தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த முறை, பிக்பாஸ் வீடு மட்டுமல்லா பிக்பாஸும் இரண்டு பேர் தானாம். அதில் ஒருவர் ஆண் பிக்பாஸாம். மற்றவர் பெண் பிக்பாஸாம் என்று கூறப்படுகின்றது. இதுவரை ஆண்குரலில் தான் பிக்பாஸ் பேசுவதைக் கேட்டிருக்கின்றோம். முதன் முறையாக பெண் குரலில் பிக்பாஸ் பேசப் போவதால் ரசிகர்கள் கடும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement