• Sep 27 2023

கல்யாணக்கலை முகத்தில ரொம்பவே தெரியுது- புதுமாப்பிள்ளை அசோக் செல்வன் வெளியிட்ட new photo- ரொம்ப அழகாக இருக்கின்றாரே

stella / 1 month ago

Advertisement

Listen News!

சூது கவ்வும் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அசோக் செல்வன். இதையடுத்து வெளியான தெகிடி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.

குறிப்பாக ஓ மை கடவுளே படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் அசோக் செல்வனின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் நடித்த மன்மத லீலை, சில நேரங்களில் சில மனிதர்கள், நித்தம் ஒரு வானம் ஆகிய திரைப்படங்கள் திரையரங்கில் பெரியளவில் வசூலிக்காவிட்டாலும், ஓடிடியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.


கடைசியாக அசோக் செல்வன் நடிப்பில் போர் தொழில் திரைப்படம்  விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.

பா.ரஞ்சித் தயாரித்துவரும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.இருவருக்கும் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி திருமணம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமண பத்திரிகை கூட இணையத்தில் வைரலாகியது.


இப்படியான நிலையில் அசோக் செல்வன் பிளாக் அன்ட் வைட்டில் தற்பொழுது புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்காக தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement