• Dec 10 2022

போதை, புகைக்கு அடிமையாகி... படப்பிடிப்புத் தளத்திலும் அடித்துத் தள்ளிய 38 வயது நடிகை..!

Listen News!
Prema / 4 weeks ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் 'ஜெயம்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சதா. இப்படத்தில் இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாது இந்தப் படத்தில் இடம் பெற்ற “போ போ போ யா” என்ற ஒரே வசனத்தில் தன்னை ஒட்டுமொத்த உலக ரசிகர்களுக்கும் அடையாளம் காட்டிக் கொண்டார்.


இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ஷங்கரின் பிரம்மாண்ட படமான அந்நியன் படத்தில் நடித்தார். மேலும் 'வர்ணஜாலம், திருப்பதி, உன்னாலே உன்னாலே'  உட்பட பல படங்களில் நடித்தார். இவ்வாறாக இவர் நடித்த அனைத்துப் படங்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக்காட்டினார்.


இதன்பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து படத்தில் நடித்து வந்த சதா, ஷூட்டிங் இடம் என்று கூட பார்க்காமல் அங்கேயே புகைப்பிடிப்பது, மது அருந்துவது என்று கூடாத பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளார்.


இதை பார்த்த பலர் அவரைக் கண்டித்தும் அதை மாற்றிக் கொள்ளாமல் இருந்துள்ளார் சதா. இதன்பின் அவருக்கு பட வாய்ப்பே இல்லாமல் போனது. இதன்காரணமாக 'டார்ச்லைட்' படத்தில் ஒரு விலைமாது பெண்ணாகவும் 'எலி' படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாகவும் நடித்து தன்னுடைய பெயரைத் தானே கெடுத்துக் கொண்டார்.