• Jan 19 2025

அந்த ஒரு டயலொக் ரொம்பவும் ஃபேமஸ் ஆகிடுச்சு.. ஜோவிகாவ மக்கள் ரொம்பவும் மிஸ் பண்ணுறாங்க.! வனிதா பெருமிதம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது 82 நாட்களை முடித்து இருக்கும் நிலையில், வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா குறித்து  பேட்டியொன்றை வழங்கியுள்ளார். 

பிக் பாஸ் 7வது சீசனைப் பொருத்தவரையில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்திருக்கிறது. ரெட் கார்டு தொடங்கி வைல்ட் கார்டு வரை, மீண்டும் பூகம்பமாக வெடித்த வைல்ட் கார்ட் என்ட்ரி என அனைத்துமே எதிர்பார்க்காத ஒன்றுதான்.

இவ்வாறு 82 நாட்கள் நிறைவடைந்திருக்கும் பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராகக் கலந்து  கொண்டவர் தான் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா. எனினும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி, தனது சினிமா பயணத்தை ஆரம்பித்துள்ளார்.


இந்த நிலையில், நடிகை வனிதா பிக் பாஸ் சீசன் 7 பற்றி கூறும் போது, மக்கள் தனது மகள் ஜோவிகாவை ரொம்ப மிஸ் பண்ணுறாங்க என சொல்லியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

இப்ப ஹாலிடே என்ற படியா நான் நிறைய மக்களை சந்தித்து இருக்கிறேன். அதுலயும் இப்ப ஜோவிகா பிக் பாஸ் வீட்டுக்கு போயிட்டு வந்த பிறகு ரொம்பவும் அன்புத் தொல்லை பண்ணுறாங்க என்பது போல சொல்லியுள்ளார் வனிதா.

அதாவது, பிக் பாஸ் வீட்டுல இருந்து வெளிய வந்த ஜோவிகா இப்ப என்ன செய்யிறாங்க.. எப்படி இருக்காங்க.. அடுத்து என்ன பண்ண போறாங்க என ரொம்பவும் விசாரிக்கிறாங்க.

அதுலயும், இரண்டு மூன்று இடத்தில அவ சொன்ன டயலாக், அது தப்பாவே இருந்தாலும் 'நீ மூடு' என்று சொன்ன டயலாக் ரொம்பவே பேமஸ் ஆயிட்டு... அதை எல்லாம் மிஸ் பண்றோம் என்ன சொல்லி இருக்காங்க.


மேலும், இப்போ ரஜினி சாருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கு.. ஆனா அவர் தப்பு தப்பா இங்கிலீஸ் கதைச்ச டயலொக் தான் அவரை இன்னும்  ஃபேமஸ் ஆகிச்சு. 

கமல் சாரும் அவருடைய தனித்துவத்தால தான் பேமஸானார். அதுபோலவே ஜோவிகாவும் இப்ப மக்கள் மத்தியில் ரொம்பவும் ஃபேமஸ் ஆயிட்டா.

அதுமட்டுமில்லாமல், பிக் பாஸ் என்ன சீர்திருத்தப்பள்ளியா? உள்ள இருக்கிற போட்டியாளர்களை திருத்த.... அவங்க அவங்களாவே இருக்கட்டும்.. அதுக்கு தானே நாங்களும் வோட் பண்ணுறம் என மக்கள் சொல்லியுள்ளதாக வனிதா கூறியுள்ளார். 

Advertisement

Advertisement