• Mar 29 2025

"அதுதான் கடைசி படம்போல நடிக்க ஆசைப்படுகிறேன்" நடிகை சமந்தா எடுத்த முடிவு..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

நயன்தாரா ,திரிஷா வரிசையில் அடுத்து முன்னனியில் இருக்கும் நடிகை சமந்தா வாழ்வில் பல சவால்களை முறியடித்து முன்னேறி வருகின்றார். அப்பாவின் இழப்பு ,விவாகரத்து ,கொடிய நோயின் தாக்கம் என பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த இவர் தற்போது தனிமையை விலக்க பல இடங்களிற்கு சென்று ஓய்வெடுத்து வருகின்றார்.


பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ள இவர் சிறந்த நடிகை என பல விருதுகளையும் பெற்றுள்ளார்.எப்பொழுதும் சிறந்த கதைகளை தெரிவு செய்து நடிக்கும் இவர் தற்போது பேட்டி ஒன்றில் தனது இனிவரும் படங்களின் தெரிவு தொடர்பில் ஒரு சில தகவல்கள் கூறியுள்ளார்.


அதாவது " தொடர்ந்து படங்களில் நடிப்பது ரொம்ப சுலபம். ஆனால் ஒவ்வொரு படத்தையும் அதுதான் கடைசி படம்போல நடிக்க ஆசைப்படுகிறேன். இனிமேல் சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். படங்களைத் தேர்ந்தெடுப்பதில் பலவிதமாக யோசித்து முடிவெடுக்கிறேன்." என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement