• Jul 10 2025

திடீர் முடிவால் புது பாடலுக்கு குதித்த தமன்! 'தி ராஜா சாப்' இசையில் ஏற்பட்ட திருப்புமுனை!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கொண்ட படமான ‘தி ராஜா சாப்’ தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் ஒரு திகில் நகைச்சுவை (Horror Comedy) படமாக உருவாகி வருகின்றது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இப்படம் தொடர்பான ஒரு சுவாரஸியமான தகவல் வெளியாகியுள்ளது.


இப்படத்திற்கான பாடல்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு படமாக்கப்பட்டுவிட்டன. தற்போது இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கியில் உள்ளது. இதில் ஒன்று திகிலுடனும் நகைச்சுவையுடனும் கூடிய காமெடி பாட்டாகவும், மற்றொன்று ரசிகர்களை ஆடவைக்கும் வேடிக்கைப் பாடலாகவும் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இந்த இரண்டு பாடல்களும் விரைவில் படமாக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது பரபரப்பை ஏற்படுத்திய ஒரு விவரம் என்னவென்றால், ‘தி ராஜா சாப்’ படத்துக்காக முன்னதாக தயாரிப்பாளர்கள் ஒரு பிரபலமான ஹிந்தி பாடலை ரீமேக்ஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ரசிகர்கள் மத்தியில் இன்னமும் விருப்பத்துடன் கேட்கப்படும் அந்த பாடலின் ரீமேக்ஸ் பதிப்பை தமன் இசையில் நவீனமாக்க திட்டமிட்டிருந்தனர்.


ஆனால், அந்த பாடலுக்கான உரிமைகள் ஒரு பெரிய இசை நிறுவனம் கையேற்றதுடன் அந்த நிறுவனம், இந்த ரீமேக்ஸ் உரிமைக்கு ரூ.5 கோடி வரை கோரி இருக்கிறது என்பது தான் அதிர்ச்சிக்குரிய செய்தி. இதனால் தயாரிப்பாளர் ஒரு பாடலுக்காக இந்த அளவிலான பணத்தை செலவிட விருப்பமில்லாததால் தமனிடம் புதுப் பாடலை உருவாக்க தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement