• Sep 21 2024

தளபதி படத்தில் அது இல்லாம இருக்குமா ? வாரிசு படம் பற்றி சீக்கிரட்டை உடைத்த தமன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் மூலம் விஜய் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய நிலையில் தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.மேலும் விஜய்யுடன் நடிகை ராஷ்மிகா இப்படத்தில் ஜோடியாக நடிக்க சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஏனு முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அத்தோடு இப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்துவிட்டு அடுத்தாண்டு பொங்கலுக்கு வாரிசு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இருக்காது என்றும், குடும்ப கதையம்சம் கொண்ட படமாகவும், எமோஷனல் கலந்த படமாகவும் இருக்கும் என்றும் தகவல் வந்தது.

வாரிசு படத்தில் வித்யாசமான விஜய்யை ரசிகர்கள் பார்க்கலாம் என்றும் படக்குழு தரப்பில் இருந்து தகவல் வந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளரான தமன் சமீபத்தில் வாரிசு படத்தின் பாடல்கள் பற்றி பேசியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது…

இப்படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றது, மேலும் ரசிகர்கள் திரையில் ஆடும் அளவிற்கு செம மாஸான பாடல்களும் இப்படத்தில் உள்ளது. விஜய் படங்களில் மாஸான பாடல்கள் இல்லாமல் இருக்குமா.

மேலும் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு இப்படத்தின் பாடல்கள் இருக்கும் என்று பேசியுள்ளார் தமன். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் வாரிசு படத்தின் பாடல்களுக்காக காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement