• Sep 30 2023

வெளியானது 'தளபதி-68' லுக்... மாஸ் தோற்றத்தில் விஜய்... இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள்..!

Prema / 4 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தான் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றது.இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.


லியோ படம் வெளியாவதற்கு முன்னாள் தளபதி 68 குறித்த அறிவிப்பை வெளியிடக்கூடாது என்பதற்காக வெங்கட் பிரபு தளபதி 68 குறித்த கேள்விகளை தவிர்த்து வருகிறார்.இந்த நிலையில் இப்படத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.


மேலும் விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், அமெரிக்காவில் இதற்கான வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் இருந்து ஹாலிவுட் டெக்னாலஜி மூலம் விஜய்யின் உடலை ஸ்கேன் செய்து, அதுகுறித்த புகைப்படங்களை வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் தளபதி-68 இல் விஜய் இந்த கெட்டப்பில் தான் நடிப்பார் எனக் கூறி வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement