• May 04 2024

'தளபதி 67' படத்தின் திரைக்கதை உருவாக்கம்... லோகேஷ் உடன் இணையும் பிரபலம்.... மறைமுகமாக வெளியான பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக தன்னுடைய நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி வருபவர் நடிகர் விஜய். சினிமாவில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் இவர் 'தளபதி' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார். இவரது நடிப்பினையும் தாண்டி நடனத்தினை ரசிப்பதற்கு என்றும் மாபெரும் ரசிகர் கூட்டம் இவருக்கு உண்டு. தமிழ்நாட்டில் மட்டுமன்றி பிற தேசங்களிலும் இவருக்கு அதிகளவான ரசிகர் கூட்டம் உண்டு.


தமிழ் சினிமாவில் இவருக்கு கதாநாயகன் என்ற அந்தஸ்தைக் கொடுத்த படம் 'நாளைய தீர்ப்பு'. இப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த இவர் இன்று 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை படைத்து வருகின்றார். இந்த நிலையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த படம் 'பீஸ்ட்'. இப்படம் ஆனது இவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை.



இத்திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வருகின்ற 'வாரிசு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மனங்களில் பெரியளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.



'வாரிசு' படத்தினைத் தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்திருந்தன. ஆனால் அப்படம் குறித்த எந்தஒரு அதிகாரபூர்வமான அறிவிப்புக்களும் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே இயக்குநர் லோகேஷ் தனது சமூக வலைதளங்களில் இருந்து சிறிய ஒரு பிரேக் எடுத்து கொண்டு அடுத்த படத்தின் அறிவிப்புடன் ட்விட்டர் பக்கத்திற்கு மீண்டும் வருவதாகவும் சமீபத்தில் பதிவு ஒன்றினை இட்டிருந்தார்.


இந்நிலையில் விஜய்யின் 67 ஆவது படத்தினை லோகேஷ் தான் இயக்கவுள்ளார் என்பதை உறுதிப் படுத்தும் வகையில் தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்துடன் 'தளபதி 67' குறித்து மறைமுகமாகவும் பதிவு ஒன்றினை இட்டிருக்கிறார். மேலும் கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து 'தளபதி 67' திரைக்கதையிலும் ரத்னகுமார் லோகேஷுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement