• May 18 2024

துணிவு படத்தின் முக்கிய பணிகள் ஆரம்பம்- புகைப்படத்துடன் வெளியாகிய மாஸான அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்து உருவாகி வரும் திரைப்படம் தான் துணிவு. இப்படத்தின் படப்பிடிப்பானது ஐதராபாத் சென்னைவிசாகப்பட்டினம், ஆகிய இடங்களில் நடைபெற்றது.இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது.  

 தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடித்து வருகின்றார்.சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். 


பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.


இந்நிலையில் துணிவு படத்தின் டப்பிங் பணிகள் தற்போது துவங்கி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. டப்பிங் பணிகள் துவங்கும் முன் நடைபெற்ற பூஜை புகைப்படம் வெளியாகி உள்ளன. இந்த பூஜையில் இயக்குநர் எச். வினோத், நடிகர் ஜி.எம். சுந்தர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement