• May 05 2024

சமந்தாவால் வந்த சோதனை...திணறிப்போய் நிற்கும் படக்குழு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சமந்தா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான சாகுந்தலம் திரைப்படம், கடந்த 14ம் தேதி வெளியானது. அத்தோடு குணசேகரன் இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. சமந்தா முதன்மையான பாத்திரத்தில் நடித்துள்ளதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இந்தப் படம் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறுஇருக்கையில், சாகுந்தலம் படத்துக்கு முதல் நாளிலேயே எதிர்பார்த்த ஓபனிங் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. மேக்கிங்கில் ஃபேண்டசியாக இருந்தாலும் கதை, திரைக்கதை ரொம்பவே போர் அடித்ததாக ரசிகர்கள் நெகட்டிவான விமர்சனம் தெரிவித்திருந்தனர்.

இதனால் 80 கோடி பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம், முதல் வாரம் முடிவில் 10 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.எனினும் முன்னதாக இந்தப் படத்தின் தியேட்டர் உரிமை 35 கோடிக்கு தான் விற்பனையானதாம். பல ஏரியாக்களில் சாகுந்தலம் படத்தை வாங்கவே ஆள் இல்லை எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதனால், ரொம்பவே குறைந்த விலைக்கு சாகுந்தலம் தியேட்டர் ரைட்ஸ் விற்பனையாகியுள்ளது.

இவ்வாறுஇருக்கையில், திரையரங்குகளில் மட்டும் சாகுந்தலம் படம் 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளதாம். இதனால் சாகுந்தலம் படத்தின் தயாரிப்பாளர், திரையரங்க விநியோகஸ்தர்கள் ரொம்பவே கடுப்பில் இருப்பதாக தெரிகிறது. சாகுந்தலம் படம் எதிர்பார்த்ததில் பாதி வசூல் கூட ஆகவில்லையாம். சமந்தாவால் தான் இந்த சோதனை என தயாரிப்பு தரப்பு புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது.

குணசேகரன் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸான ருத்ரமாதேவி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்திருந்தது. ஆனால், சாகுந்தலம் இப்படி மோசமான தோல்வியை தழுவும் என அவரும் எதிர்பார்க்கவில்லையாம். சாகுந்தலம் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றும் படம் இப்படி படுத்துவிட்டதே என சமந்தாவும் டென்ஷனாக தான் இருக்கிறாராம்.

சாகுந்தலம் படத்தின் முதல் வாரம் ரிசல்ட்டை பார்த்தே அப்செட் ஆகிவிட்ட சமந்தா, கடும் மன விரக்தியில் செல் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு யாரையும் தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளார். அதன்பிறகே சிட்டாடல் வெப் சீரிஸின் ப்ரொமோஷனுக்காக அமெரிக்கா பறந்துவிட்டாராம். சாகுந்தலம் படத்தின் தோல்வியால், சமந்தாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பதே சந்தேகம் தான் என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.

காளிதாசன் எழுதிய சகுந்தலையின் காதல் கதையை பின்னணியாக வைத்து சாகுந்தலம் உருவாகியுள்ளது. சமந்தா ஜோடியாக மன்னன் துஷ்யந்தன் கேரக்டரில் தேவ் மோகனும், மற்ற பாத்திரங்களில் அதிதி பாலன், கௌதமி, பிரகாஷ்ராஜ், மதுபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். அதேபோல் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு ஆர்கா சமந்தா மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

சாகுந்தலம் படத்தில் முதலில் அனுஷ்கா நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறுஇருக்கையில்  திரையரங்குகளில் தோல்வியடைந்த சாகுந்தலம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலாவது தயாரிப்பு தரப்புக்கு லாபம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement