• Jan 18 2025

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ராஜ சிம்மாசனம் போட்டுள்ள தங்கலான்! இதுவரை குவிந்த கோடிகள்..??

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலக அளவில் வெளியானது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் இந்தியிலும் ரிலீசாக உள்ளது. தங்கலான் படம் வெளியாகி முதல் நாளிலேயே 26.44 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்திற்கு தற்போது வரையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றத

தங்கலான் படம் குறித்த விமர்சனங்களில் அரசியல் தான் மிகவும் முக்கியமாக காணப்படுகின்றது. மேலும் நாகர்கள், பௌத்தம், பூர்வகுடி, கோலார் தங்கவயலை கதைக்களமாகக் கொண்டும் மாய எதார்த்தத்தை திரைக்கதையாகக் கொண்டு பா. ரஞ்சித் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த காரணங்களுக்காகவே படத்தினை ரசிகர்கள் பாராட்டி வருகின்றார்கள்.


ஜிவி பிரகாஷ் குமார் இசையும் இந்த படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. குறிப்பாக தங்கலானுக்காக பல்வேறு பழங்குடி இன மக்களின் இசையைத் தேடித் தேடி கோர்த்துக் கொண்டுள்ளார். பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த நிலையில், தங்கலான் படம் வெளியாகி ஆறு நாட்களை கடந்த நிலையில், இதுவரையில் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் விரைவில் 100 கோடி ரூபாய் வரை வசூலில் சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement