• Jan 19 2025

மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த தமிழ் சினிமா தயாரிப்பாளர். அதிரடி கைது..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் தனது அலுவலகத்தில் வேலை செய்யும் இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததை எடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்ற தமிழ் சினிமா தயாரிப்பாளரின் அலுவலகத்தில் 28 வயது இளம்பெண் ஒருவர் பணி செய்து வந்ததாகவும், அந்த பெண்ணை தான் காதலிப்பதாக முகமது அலி கூறியதாகவும் தெரிகிறது.

ஆனால் முகமது அலிக்கு ஏற்கனவே திருமணம் ஆனவை மறைத்து அவர் அந்த பெண்ணை காதலித்ததோடு மட்டுமின்றி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து அந்த இளம்பெண் கர்ப்பமான நிலையில் சத்து மாத்திரைகள் என கூறி கர்ப்ப கலைப்பு மாத்திரை கொடுத்ததாகவும், கர்ப்பம் கலைந்தது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்வேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.

அது மட்டும் இன்றி ஆபாசமாக அந்த இளம் பெண்ணை முகமது அலி வீடியோ எடுத்திருப்பதாகவும் அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க 5 லட்சம் ரூபாய்க்கு கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அந்த இளம் பெண் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இளம்பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement