• Jan 18 2025

டூபீஸ் நீச்சலுடையில் ராஷ்மிகா மந்தனா அருவியில் குளிக்கும் வீடியோ.. பின்னணியில் ஒரு அதிர்ச்சி காரணம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஷ்மிகா மந்தனாவின் போலி ஆபாச வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் அமிதாப்பச்சன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் அதற்கு கண்டனம் தெரிவித்தனர் என்பதும் அதனை அடுத்து காவல்துறை இது குறித்து நடவடிக்கை எடுத்தது என்பதையும் பார்த்தோம்.

டீப்ஃபேக் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபல நடிகர் நடிகைகளை ஆபாசமாக சித்தரித்து வீடியோக்கள் வெளியிட்டு வருவது அதிகரித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ராஷ்மிகா மந்தனாவின் நீச்சலுடை வீடியோவையும் டி டீப்ஃபேக் முறையில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலம்பியா நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவை சில மர்ம நபர்கள் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ போல் மாற்றி டீப்ஃபேக் தொழில்நுட்பத்தில் ஆபாச வீடியோவாக சித்தரித்துள்ளனர். அந்த வீடியோவில் ராஷ்மிகா மந்தனா டூபிஸ் நீச்சல் உடையில் அருவியில் குளிப்பது போல் இருக்கும் நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



இதுவரை ராஷ்மிகா மந்தனா எந்த ஒரு திரைப்படத்திலும் டூபீஸ் நீச்சல் உடையில் நடித்தது இல்லை என்பதும் அது மட்டும் இன்றி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் கூட அவர் நீச்சல் உடையில் இருப்பது போன்ற புகைப்படம் வீடியோக்களை வெளியிட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து ராஷ்மிகா மந்தனா காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement