• May 08 2024

விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் தமன்னா... எல்லை மீறிய காட்சியால் ரசிகர்கள் ஷாக்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இருவரும் இதுவரை தங்கள் காதலை வெளிப்படையாக உறுதி செய்யாமல் இருந்து வந்தனர்.


ஆனால் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இந்தக் காதல் குறித்து தமன்னா ஜாடை மாடையாக தெரிவித்திருந்தார். அதாவது இதன் மூலமாக விஜய் வர்மாவும் தமன்னாவும் காதலிப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.


இந்நிலையில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த தமன்னா சில காலம் வாய்ப்பின்றி இருந்து வந்ததால் வெப் தொடரில் நாட்டத்தை ஈடுபடுத்தினார். அந்தவகையில் சமீபத்தில் தி லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜீ கர்தா என்ற வெப் தொடர்களில் நடித்தது மட்டுமில்லாமல் எல்லைமீறிய, நெருக்கமான காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்கவும் வைத்துள்ளார். 


அந்தவகையில் ஜீ கர்தா வெப் தொடர் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, ஜூன் 29 ஆம் தேதி தமன்னா மற்றும் அவரது காதலர் விஜய் வர்மா நடிப்பில் உருவாகிய லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆந்தாலஜி படம் வெளிவரவுள்ளது.

இப்படத்திற்கான ப்ரோமோஷன் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் தமன்னா தற்போது வருங்கால கணவருடன் நடித்த அப்படத்தின் முத்தக்காட்சியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ப்ரமோஷன் செய்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement