• May 11 2024

தளபதி 66 படத்தில் இணைந்த குழந்தை நட்சத்திரங்கள் யாரென்று பாருங்க- வெளியாகிய லேட்டஸ்ட் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் . இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகின்றார். இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகின்றார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், யோகிபாபு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் ஹர்ஷிதா கார்த்திக் மற்றும் அத்வைத் வினோத் ஆகிய இரு குழந்தை நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement