• Sep 30 2023

கடத்தல் வழக்கில் வெண்ணிலாவைக் கைது செய்த போலீஸ்... காப்பாற்ற முடியாமல் துடிக்கும் சூர்யா... 'Kaatrukkenna Veli' Promo Video..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஒரு ஹிட் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் ஆனது முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் நடந்து வந்து கொண்டிருந்த வெண்ணிலாவை அழைத்த ஒரு கும்பல் பெட்டியைத் தூக்கி வண்டியில் ஏற்ற உதவுமாறு கேட்கின்றனர். இதனையடுத்து வெண்ணிலாவும் அவர்களுக்கு உதவுகின்றார். 


அந்த சமயத்தில் அங்கு வந்த போலீஸ் குறித்த பாக்ஸை சோதனையிடுகையில் அதில் பவுடர் இருப்பது தெரிய வருகின்றது. இதனையடுத்து போலீசார் குறித்த கும்பலை போட்டு அடிக்கின்றனர். அதற்கு அந்தக் கும்பல் பவுடர் கடத்திறதற்கு இந்தப் பொண்ணு தான் முக்கிய காரணம் எனக் கூறுகின்றனர்.


இதனையடுத்து போலீசார் வெண்ணிலாவை கைது செய்கின்றனர். இதனைப் பார்த்த சூர்யா காப்பாற்ற முடியாமல் துடிதுடிக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement