• Feb 24 2025

கொழுத்துங்கடா வெடிய..!! 97 வது ஆஸ்கர் விருதுக்குள் அதிரடியாக நுழைந்த சூர்யாவின் கங்குவா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம்  சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. இதனால் இதன் தயாரிப்பாளர் கங்குவா திரைப்படம் 2000 கோடி வரை வசூலிக்கும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காணப்பட்டார்.

நடிகர் சூர்யாவின் பிரம்மாண்டமான நடிப்பில் உருவான கங்குவா  படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருந்தார். மேலும்  இவர்களுடன் கருணாஸ், நட்டி நட்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தனர்.

d_i_a

கடந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படமாக கங்குவா திரைப்படம் காணப்பட்டது. ஆனாலும் இந்த படம் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. உலக அளவில் சுமார் 10,000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படம், வசூலில் தோல்வியை தழுவியது.


கங்குவா  படத்தின் ரிலீஸுக்கு முன்பே பட குழுவினர் இந்த படத்தை மிகப்பெரிய ரேஞ்சுக்கு பில்டப் செய்தது தான் பல ட்ரோல்கள் உருவாக காரணமாக இருந்தது. ஆனாலும் இந்த படத்திற்கு ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கங்குவா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இணைந்துள்ளது. சிறந்த படத்திற்கான தேர்வில் உலகளவில் இருந்து 323 படங்கள் போட்டியிடுகின்றன. அதில் கங்குவா  திரைப்படமும் ஒன்றாக காணப்படுகின்றது .இந்த தகவலை சூர்யாவின் ரசிகர்கள் மிக வேகமாக பகிர்ந்து வருகின்றார்கள்.


இதேவேளை தமிழ் சினிமாவில் முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட கங்குவா  திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பல சரிவுகளை சந்தித்திருந்தாலும் இந்த படத்திற்கு பல பிரபலங்களும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement