• Jan 22 2025

அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியான மதகஜராஜா டிரைலர்.! பொங்கலுக்கு சரவெடி தயார்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சுந்தர். சி - விஷால் கூட்டணியில் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் தான் மதகஜராஜா. இந்த திரைப்படத்தில் சந்தானம், அஞ்சலி மற்றும் வரலட்சுமி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம், அந்த ஆண்டு பொங்கலுக்கே ரிலீசாக இருந்தது. ஆனாலும் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட நிதி பிரச்சனை காரணமாக இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது சுமார் 12 ஆண்டுகள் கழித்து எதிர்வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது.

d_i_a

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மதகஜராஜா படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய சுந்தர்.சி, இந்த படத்தை வெளியிடுவதற்காக நான் பாடுபடுவதற்கு முக்கிய காரணமே விஷால் தான். 


ஏனென்றால் இந்த படத்தில் விஷால் உசுரையே கொடுத்து நடித்துள்ளார். அவருடைய உழைப்பை மக்கள் பார்க்க வேண்டும் என்று விஷால் பற்றி மிகவும் பெருந்தன்மையாக பேசியிருந்தார்.

அதேபோல நடிகர் விஷாலும் கடும் காய்ச்சலுக்கு மத்தியில் குறித்த பிரஸ் மீட்டில் கலந்து கொண்டிருந்தார். இதன் போது அவருடைய கைகள் நடுங்கி உடல் சோர்வாக காணப்பட்டது இணையத்தில் வைரலானது. அதன் பின்பு அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இந்த நிலையில், மதகஜராஜா திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிகரித்து காணப்பட்ட நிலையில், மதகஜராஜா படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement