• May 04 2024

சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா- புதிய படத்தின் லேட்டஸ்ட் தகவல்- ஓ இது தான் படத்தின் கதையா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரோலக்ஸ் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்ததில் இருந்து நடிகர் சூர்யாவின் மவுஸ் ஆனது அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

அந்த வகையில் சூர்யா தற்பொழுது இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் முதற்கட்டப்படப்பிடிப்பானது நிறைவடைந்துள்ளது. இதில் சூர்யா மீனவன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகின்றது.


இதனையடுத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக ஜல்லிக்கட்டுப் பயிற்சியில் எல்லாம் சூர்யா ஈடுபட்டு வந்தார்.

இது தவிர இப்போது சிறுத்தை சிவா படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் சென்னையில் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படம் வரலாற்றுக் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement