• May 09 2024

டுவிட்டரில் குட் நியூஸ் கொடுத்த சூரியா... வெளியானது "சூர்யா 43"அறிவிப்பு வீடியோ... மரணகுஷியில் ரசிகர்கள்...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூரியா அவர்கள் சிவா இயக்கத்தில் கங்குவா  படத்தில் நடித்து வருகிறார்,இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க போகிறார். சூர்யாவின் 43வது படமாக உருவாகும் இதில் நாயகியாக நஸ்ரியா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் துல்கர் சல்மான், விஜய் வர்மா நடிக்கின்றனர்.
  


இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜிவியின் 100வது படமாகும். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. சூரரைப்போற்று படத்திற்கு பின் சூர்யா, சுதா, ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும்.


இப்படம் பற்றிய அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மாணவர்கள் போராட்டம், போலீசார் அவர்களை அடக்குவது, துப்பாக்கிச்சூடு போன்ற குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும் புறநானுறு என குறிப்பிட்டு மேலே இரண்டு விஷயங்களை லேபிள் போட்டு மறைத்துள்ளன.


நடிகர் சூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக சூரியா 43 படத்தின் முன்னறிவிப்பு விடீயோவை போஸ்ட் செய்து இவ்வாறு பதிவிட்டுள்ளார்.  இதோ அந்த டுவிட் பதிவு......


Advertisement

Advertisement

Advertisement