• Jul 10 2025

மன்னிப்பு கேட்டால் தான் சரியா? – கர்நாடக நீதிமன்றத்தை எதிர்த்த உச்சநீதிமன்றம்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் நுட்பமான நடிகராகவும், சமூகத்தில் சிறந்த கருத்துக்களைப் பேசும் ஒருவராகவும் அறியப்படும் கமல் ஹாசன், சமீபத்தில் அவரது புதிய திரைப்படமான ‘தக் லைஃப்’ தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருந்தார்.


இந்த விவகாரம், ஒரு இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறிய "கன்னடம் என்பது தமிழிலிருந்து தோன்றியது" என்ற உரையுடன் தொடங்கியது. தற்போது இது கலாசார அரசியல், மற்றும் நீதிமன்ற சட்டத் தகராறாக வளர்ந்திருக்கிறது.

இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் கமல் ஹாசனை மன்னிப்பு கேட்கச் சொல்லியதற்கு, இந்திய உச்சநீதிமன்றம் நேரடியாக கண்டனம் தெரிவித்து, “நீதிமன்றத்தின் வேலை அது அல்ல” என்று கடுமையாக எடுத்துரைத்தது.


‘தக் லைஃப்’ திரைப்படம், மணிரத்னம், கமல் ஹாசன்,கூட்டணியில் உருவான பன்மொழித் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்நிலையில்  'தக் லைஃப்’ வழக்கில் நடிகர் கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை இல்லை. உயர் நீதிமன்றம் எப்படி அவ்வாறு கூறலாம் என கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பியுள்ளது.

Advertisement

Advertisement