• May 07 2024

சூப்பரு...! லியோ பட ஷூட்டிங்கில் இணையும் கமல் ஹாசன்.. எங்கு, எப்போது தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ.இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தொடர்ந்து லியோ படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் கேட்காமலேயே வெளியாகிறது.

சமீபத்தில் கூட, விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் 'லியோ ஒரு பக்கா ஆக்ஷன் படம்' என கூறினார். காஷ்மீரில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், சென்னையில் துவங்கவுள்ள லியோ படத்தின் படப்பிடிப்பில் கமல் ஹாசன் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது ஏற்கனவே பகத் பாசில் இப்படத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது கமல் ஹாசனும் இணைய போகிறார் என்பதினால் LCUவில் லியோ கண்டிப்பாக இருக்கிறது என ரசிகர்கள் உறுதிசெய்து இந்த தகவலை வைரலாக்கி வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement