• May 09 2024

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

 இயக்குநர் அஸ்வின் மடோனா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநயகனாக நடிக்க, அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் உருவாகி வருகின்றது.

தமிழில் ‘மாவீரன்’ என பெயரிடப்பட்ட இந்த படம் தெலுங்கில் ‘மாவீருடு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.


படம் நிறுத்தப்பட்டதாக தகவல் சில மாதத்திற்கு முன் பரவிய எஸ் கே ரசிகர்களை அதிச்சியடைய வைத்த நிலையில் , பின்னர் அது பொய்யான தகவல் என இயக்குநர் உறுதிப்படுத்தினார். தற்பொழுது படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது.

அதாவது படத்தை அடுத்த வருடம் 'பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் படக்குழு படத்தின் பணிகளை விரைந்து செய்து வருகிறார்களாம். எஸ் கே,அதிதியுடன் முதல் முறையாக  ஜோடி சேருவதால் இந்த ஜோடியை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர்.



Advertisement

Advertisement

Advertisement