• May 03 2024

விவாகரத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலிருந்து வெளியாகிய சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்தோடும் நடிகர் தனுஷின் மனைவி என்றும் அழைக்கப்படுபவர் தான் ஐஸ்வர்யா. இவர் தற்பொழுது தனது கணவரைப் பிரிந்து வாழும் நிலையில் மீண்டும் இயக்குநர் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இதற்கு முன்னதாக இவர் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியிருக்கின்றார். தற்பொழுது  லால் சலாம் என்ற படத்தை இயக்கப் போகிறார். ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினி ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கப் போகிறார்.


 லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் செட் ஒர்க் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது அண்ணாமலையார் அருள் ஆசியுடன் செட் ஒர்க் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் நன்றி என ஐஸ்வர்யா ரஜினி செட் ஒர்க் பூஜை குறித்த வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement