• Sep 26 2023

சூப்பரு...ப்ரீ புக்கிங்கில் பல கோடிகளை குவித்த ஜெயிலர்.. எவ்வளவு தெரியுமா?

Jo / 1 month ago

Advertisement

Listen News!

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிரணா, மோகன்லால், விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை உச்சத்திற்கு எடுத்து சென்றுவிட்டது.

கண்டிப்பாக மாஸ் கமர்ஷியல் படமாக ஜெயிலர் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வருகிற 10ஆம் தேதி வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான ப்ரீ புக்கிங் ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில், ப்ரீ புக்கிங்கில் இதுவரை உலகளவில் மட்டுமே ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம் ஜெயிலர். இதுவே ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு என கூறப்படுகிறது.

இதனால் கண்டிப்பாக முதல் நாள் மாபெரும் வசூல் சாதனையை ஜெயிலர் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.


Advertisement

Advertisement

Advertisement