• May 06 2024

பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசைவெளியீட்டு விழா பற்றி வெளியான சூப்பர் தகவல்...இதை யாரும் எதிர்பார்க்கலையே.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் ரிலீசுக்காக தான் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து உள்ளனர்.

இப் படம் அடுத்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது லைகா நிறுவனம்.

மார்ச் 29ம் தேதி பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் என லைகா புது போஸ்டர் வெளியிட்டு தெரிவித்து இருந்தது.அத்தோடு  இந்த ட்ரெய்லர் 3 நிமிடம் 25 நொடிகள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.



இந்நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிரைலர் மற்றும் இசையை வெளியிட இருப்பதாகவும் லைகா நிறுவனம் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement