• May 05 2024

சன்னிலியோனின் ஓமைகோஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு- எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சன்னி லியோன். கவர்ச்சி நடிகையான இவர் தற்பொழுது தமிழ் தெலுங்கு அகிய மொழிகளிலும் நடித்து வருகின்றார்.

டேனியல் வெபர் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் நிலையில், வாடகைத் தாய் மூலம்,  இரட்டைக் குழந்தைகளையும் பெற்று வளர்த்து வருகிறார்.


மேலும் இவர் தமிழில் ஓமை கோஸ்ட் என்னும் பேய்ப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன்  சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி. முத்து மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.


இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக சன்னி லியோனின் பிரத்யேக வடிவமைப்பு போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement