• May 05 2024

சுதா கொங்கரா வாங்கிய புதிய சொகுசு கார்..விலையை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டின் வெற்றி பட இயக்குநராக வலம் வருபவர்  தான் சுதா கொங்கரா. இவர் 2010 -ஆம் ஆண்டு வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். இறுதிச்சுற்று படம் தான் அவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது.


இதன் பின் Air Deccan Founder மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரியான ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை மையமாக வைத்து எடுக்கப் பட்ட சூரரை போற்று எனும் படத்தை இயக்கினார்.மேலும் இதில் சூர்யா நடித்திருந்தார்.இப்படத்திற்காக 5 தேசிய விருதுகள் கிடைத்தது.

அத்தோடு சில வாரங்களுக்கு முன்பு சுதா கொங்கரா ரத்தன் டாடாவின் பயோபிக் எடுக்க போகிறார் என தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவியது.எனினும்  இதற்கு சுதா "ரத்தன் டாடாவை எனக்கு பிடிக்கும் அனால் நான் அவரின் பயோபிக் எடுக்கவில்லை என ட்வீட்" செய்தார்.


தற்போது சுதா கொங்கரா புதிய ஆடி காரை வாங்கியுள்ளார். அத்தோடு இந்த சந்தோஷமான விஷயத்தை சூர்யா, ஜிவி பிரகாஷ், மணிரத்னம், ராஜசேகர் பாண்டியன் பிரபலங்களுடன் பகிர்ந்துள்ளார்.


அவர் வாங்கிய Audi e- tron காரின் விலை சுமார் ரூ 1.25 கோடி என தெரியவந்துள்ளது. காற்றை மாசுபடுத்தாத கார் வாங்கியது மகிழ்ச்சி என அவர் கூறி இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement