• Oct 16 2024

திடீரென மணிரத்னம் வீட்டுக்கு சென்ற பிரம்மாண்ட இயக்குநர்கள்... என்ன விசேஷம்?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குர்களான ஷங்கர், லோகேஷ் கனகராஜ் உள்பட ஏராளமானோர் மணிரத்னம் வீட்டில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு உள்ளனர்.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குராக திகழ்ந்து வருபவர் மணிரத்னம். இவருக்கு தற்போது வயது 70-ஐ நெருங்கிவிட்டாலும், இன்றளவும் இளம் தலைமுறையினருக்கு பிடிக்கும் விதமாக படங்களை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். பொன்னியின் செல்வன் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை இயக்கி பிரம்மாண்ட வெற்றியை ருசித்த மணிரத்னம், அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து ஒரு தரமான படத்தைக் கொடுக்க தயாராகி வருகிறார்.


இந்த நிலையில், இயக்குனர் மணிரத்னத்தின் வீட்டில் பிரம்மாண்ட இயக்குனர்களின் மீட்டிங் நடந்துள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் கவுதம் மேனன், இயக்குனர் சசி, இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரை தனது இல்லத்திற்கு அழைத்து சர்ப்ரைஸ் மீட்டிங் ஒன்றை நடத்தி இருக்கிறார்.

இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “இந்த ஸ்பெஷலான தருணத்துக்கு நன்றி மணி சார்! சிறந்த மற்றும் கொண்டாடப்படும் இந்த இயக்குனர்களுடன் பழகுவது, அவர்களுடன் நினைவுகளைப் பகிர்வது, கார்த்திக் பாடிய சில எவர்கிரீன் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுக்கு வைப் செய்தது போன்ற தருணங்கள் தான் நான் சம்பாதித்த உண்மையான செல்வமாக உணர்கிறேன். உபசரிப்புக்கு மிக்க நன்றி சுஹாசினி” என பதிவிட்டுள்ளார்.

பிரம்மாண்ட இயக்குனர்களிடையே நட்பு உருவாக காரணமாக இருந்தது கொரோனா ஊரடங்கு தான். அந்த சமயத்தில் சினிமா படப்பிடிப்புகள் எல்லாம் தடை பட்டிருந்த காலகட்டத்தில் தான் இவர்களிடையே நட்பு ஏற்பட்டது. அப்போதிலிருந்து அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் இவர்கள், தற்போது மணிரத்னம் வீட்டில் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். பட வேலைகளில் பிசியாக இருந்ததன் காரணமாக வெற்றிமாறன், மிஷ்கின், சுதா கொங்கரா போன்றவர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement