• Jan 19 2025

விஜய் டிவி பிரபலம் சித்ராவின் மரண வழக்கில் ஹேம்நாத்திற்கு ஹைகோர்ட் கிடுக்குபிடி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி நட்சத்திரமாக ஒரு காலத்தில் ஜொலித்தவர் தான் நடிகை சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.

மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் இருந்து தனது கடின உழைப்பினாலே முன்னுக்கு வந்ததாகவும் மெல்ல மெல்ல கார், வீடு என தனது சொந்த உழைப்பினால் தனது வீட்டார்களின் வறுமை நிலையை மாற்றியவர். இவருக்கும் இவரது காதலனுக்கும் விஜய் டிவி மேடையிலேயே மாலை மாற்றி சடங்குகள் கொண்டாடப்பட்டது.

எனினும் யாருமே எதிர்பார்க்காத விதமாக சித்ரா தான் இருந்த ரூமிலேயே உயிரை மாய்த்துக் கொண்டார். ஆனாலும் அவர் இறக்கும் அந்த சமயத்தில் அவருடைய கணவர் ஹேம்நாத் அவருடன் காணப்பட்டார். சித்ரா உயிரிழந்ததற்கு பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் சித்ரா உயிரிழக்கும் போது தான் அந்த ரூமில் இல்லை எனவும் அவர் அந்த டைம் வெளியே சென்று இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.


எனினும் சித்ராவின் மரண வழக்கில் ஹேம்நாத் உட்பட ஏழு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்கள். சமீபத்தில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது முறையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அவரை விடுதலை செய்திருந்தது நீதிமன்றம். இது சித்ராவின் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

இந்த நிலையில் சித்ராவின் மரண வழக்கில் இருந்து கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சித்ராவின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை எதிர்வரும் நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement