• May 04 2024

திடீரென நடிகர் மம்முட்டியின வீட்டில் ஏற்பட்ட சோகம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மம்மூட்டி, 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் என 6 மொழிகளில்400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்துள்ளார்

மலையாள சூப்பர் ஸ்டார் என புகழப்படும் இவர் இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை” மூன்று முறையும், கேரள அரசின் விருதை  மூன்று முறைக்கு மேலும், ஏழு முறைக்கும் மேல் ‘ஃபிலிம்பேர் விருதையும், மத்திய அரசின் “பத்ம ஸ்ரீ” விருது மற்றும் பல விருதுகளையும் பெற்றவர். 


தமிழில் கூட “மௌனம் சம்மதம்”, ‘அழகன்’, ‘தளபதி’, ‘கிளி பேச்சு கேட்கவா’, ‘அரசியல்’, ‘ஆனந்தம்’, ‘எதிரும் புதிரும்’, ‘கார்மேகம்’, ‘ஜாக்பாட்’, ‘மக்கள் ஆட்சி’, ‘மறுமலர்ச்சி’, ‘ராஜா போக்கிரி ராஜா’, ‘விஷ்வ துளசி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பழசி ராஜா’ போன்ற பல்வேறு படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்


தற்பொழுது இவர் ஜோதிகாவுடன் புதிய படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் இவரது தாயாரான ஃபாத்திமா வயது மூப்பு காரணமாக தனது 93வது வயதில் இறந்துள்ளார். இதனால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement