• Apr 27 2024

காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்-யாரும் எதிர்பார்க்கலையே…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சிகளில் ரி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக போட்டி போட்டு பல சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. அதில் பல்வேறு விதமான கதை நகர்ந்து கொண்டே இருக்கின்றது.அந்த வகையில் விஜய் டிவியில் தற்போது கல்லூரி வாழ்க்கை சார்ந்த ஒரு தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அது காற்றுக்கென்ன வேலி சீரியல் தான். இந்த சீரியல் கல்லூரி கதைக்களத்தோடு அமைந்திருந்தாலும் காதல், சண்டை என வாழ்க்கையின் முக்கிய பரிமாணங்களை இளமை ததும்ப எடுத்துரைத்து வருகிறது.

மேலும் இந்த சீரியலில் அப்பாவை எதிர்த்து ஆசிரியையின் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வெண்ணிலா என்ற பெண் காலப்போக்கில் கல்லூரி பேராசிரியர் சூர்யாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர்களது காதல் கை கூடுமா என்பதன் பின்னணியை வைத்து இந்த ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.

ஏற்கனவே வெண்ணிலா மற்றும் சூர்யா ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்று தான் கூற வேண்டும். தர்ஷனின் விலகலுக்கு பின்பு சூர்யா கதாப்பாத்திரத்தில் சுவாமிநாதன் அனந்தராமன் நடித்து வருகின்றார். அவர் இதற்கு முன் மிதுன ராசி சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.அவர் கன்னட சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த சீரியல் குறித்து புத்தம் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது காற்றுக்கென்ன வேலி சீரியலின் இயக்குநர் மாற்றப்பட்டதாக தகவல்கள் தீயாய் பரவி வருகின்றது. புது இயக்குநருடன் வென்னிலா மற்றும் சூர்யா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் இது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை, அதே போல் இந்த புது இயக்குநர் ஏற்கெனவே பல சீரியல்களை இயக்கியுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் தாலாட்டு சீரியலின் முன்னாள் இயக்குநரும் இவர் தான். சன் டிவியில் ஒளிப்பரப்பான பிரியமானவள சீரியலிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்த சீரியலுக்கு விஜய் டிவி டெலிவிஷன் அவார்டில் ஒரு விருது கூட வழங்காமல் போனதற்கு ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து இருந்தனர். குறிப்பாக இந்த சீரியலுக்கு இளைஞர்கள் ஃபேன்ஸ் கூட்டம் அதிகம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement