• Sep 12 2025

நான் சிறந்த அத்தை...!பாலூட்டும் புகைப்படத்தால் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீநிதி..!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

‘கே.ஜி.எப்’ மற்றும் ‘கே.ஜி.எப் 2’ படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, வெற்றி பாதையில் பயணித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் நானியுடன் நடித்த ஹிட் 3 திரைப்படம் ரூ.100 கோடி வசூல் சாதனை அடைந்தது. இதில் ஸ்ரீநிதி நடித்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


தற்போது புலாசா காடா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் ராஷி கண்ணா இன்னொரு முக்கிய கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில், ஸ்ரீநிதி தனது சமூக வலைத்தளங்களில் ஒரு புதிய புகைப்படத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். புகைப்படங்களில் ஒரு  குழந்தையை தனது மடியில் வைத்து, பாசமாக பாலூட்டும் போஸ் கொடுத்துள்ளார்.


இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விரைவாக வைரலாகி, “ஸ்ரீநிதிக்கு திருமணம் ஆகி விட்டதா? அவருக்கு குழந்தை  இருக்கா..!” என்ற வதந்திகள் பரவத் தொடங்கின. சிலர் ஆதரவாக கருத்து தெரிவித்தாலும், சிலர் விமர்சனங்களும் எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஸ்ரீநிதி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம், “நான் எழுந்தபோது என் குழந்தைகள் என் அருகில் இருந்தார்கள்... நான்தான் சிறந்த அத்தை” என பதிவு செய்துள்ளார். இது ஒரு பாசமான குடும்ப தருணம் என்பதை நடிகை நன்கு விளக்கி விட்டுள்ளார்.




Advertisement

Advertisement