• Nov 08 2024

சௌந்தர்யாவே ஒரு ஸ்கேம் தான்... 17 லட்சம் கதை உருட்டல்ல..!! சனம் ஷெட்டிக்கு சரியான பதிலடி

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அம்புலி என்ற படத்தின் மூலம் தனது திரை உலக பயணத்தை ஆரம்பித்தவர் தான் நடிகை சனம்  ஷெட்டி. இவர் தொடர்ச்சியாக ஒரு சில படங்களில் நடித்தார்.

இதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 'மிஸ் சவுத் இந்தியா' என்ற அழகிப் போட்டியில் பங்கு பற்றி டைட்டிலையும் வெற்றி பெற்றார். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று  மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகையாகவும் காணப்படுகின்றார்.

d_i_a

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கு பற்றிய சனம், சுமார் 63 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடித்தார். அதன்பின்பு மகா என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் எதிர்வினை ஆற்று என்ற படத்திலும் நடித்துள்ளார்.


இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து விமர்சித்து வரும் சனம் ஷெட்டி, தற்போது பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராக பங்கு பற்றியுள்ள சௌந்தர்யா தான் ஆர்பிஐ மூலமாக 17 லட்சத்தை இழந்ததும், அது தனது வீட்டுக்கே தெரியாது என்று அவர் பேசியதும் சுத்தமான உருட்டு என சோசியல் மீடியாவில் ட்வீட் போட்டுள்ளார். ஆனால் அதற்கு சௌந்தர்யா தரப்பில் அது உண்மைதான் என ஆதாரத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்கள்.


அதாவது சமீப காலமாகவே ஆர்பிஐ அதிகாரி பேசுகின்றோம், சிபிஐ அதிகாரிகள் பேசுகின்றோம் என்றும் அழைப்புகளை ஏற்படுத்தி அதில் உங்கள் போனை இல்லீகல் பிசினஸ்க்காக தீவிரவாதிகள் பயன்படுத்தி உள்ளார்கள். நீங்களும் அதற்கு உடந்தை.. ஆகவே உங்களை கைது செய்யப் போகின்றோம் என மிரட்டல் விடுத்து அதன் பின்பு முடிந்த அளவு பணத்தை கறந்து ஏமாற்றி விடுகின்றார்கள்.


இவ்வாறான ஒரு அழைப்பின் மூலம் தான் சௌந்தர்யாவை போன் கால் மூலம் பயமுறுத்தி அந்தரங்க விஷயங்களை எல்லாம் லீக் செய்து விடுவோம் என மிரட்டி 17 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி உள்ளார்களாம். இந்த கதையை பிக் பாஸ் வீட்டில் சௌந்தர்யா சொல்லியுள்ளார். ஆனாலும் இது கதை தான்.. நல்லா உருட்டுகிறார் சௌந்தர்யா என பலரும்டுவிட் போட ஆரம்பித்தார்கள்.


அதன்படியே சனம் ஷெட்டியும் சௌந்தர்யாவே ஒரு ஸ்கேம் தான். தற்போது அவரது பொய்யான முகம் அம்பலமாகி உள்ளது. 17 லட்சத்தை இழந்த யாரும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்காமல் இருப்பார்களா? என ட்டுவிட் போட்டு இருந்தார்.

இதற்கு சௌந்தர்யா சொன்னது ஒன்றும் பொய் அல்ல. அவர் உண்மையிலேயே ஏமாந்தார். இது தொடர்பில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டது என உண்மையான எப் ஐ ஆர் காபியை சௌந்தர்யாவின் டீம் அவரது ட்விட்டர் பக்கத்தில் போட்டு சனம் செட்டிக்கு பதிலடி கொடுத்துள்ளார்கள். தற்போது இந்த விடயம் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

Advertisement