• Jul 27 2024

வாடிவாசல் படத்தில் இத்தனை மர்மங்களா? பிரபலம் அடித்து சொன்ன சீக்ரெட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

ஹாலிவுட்டின் சிறந்த நடிகர்களுள் ஒருவராக நடிகர் சூர்யா திகழ்ந்து வருகிறார். இவர் பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். எனினும் இதில் இருந்து சூர்யா விலகிக் கொள்வதாகவும் அவருக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. தற்போது இதன் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இனி இந்த படம் எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து காளைகளை வரவழைத்து டெஸ்ட் ஷூட் நடத்தி இருந்தார் வெற்றிமாறன். அதில் நடிகர் சூர்யா, டாணாகாரன் இயக்குனரும் நடிகருமான தமிழ் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இந்த ஷூட்  ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.


இந்த நிலையில், தற்போது வாடிவாசல் படம் பற்றி வசந்தபாலன் பேட்டியொன்றில் சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

முதலில் இந்த படத்தை சூர்யாவை வைத்து லிங்குசாமி தான் இயக்க இருந்தார். ஆனால் ஏதோ ஒரு காரணங்களால் அந்த படம் நடக்கவில்லை. மேலும் தானும் அதை படம் பார்க்க விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

லிங்குசாமி சூர்யாவை வைத்து அஞ்சான் படத்தை இயக்கினார். அந்தப் படம் பெரும் தோல்வியால் அமைந்ததை அடுத்து லிங்குசாமி கடுமையான ட்ரோலுக்கு ஆளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement