• May 02 2024

சிவகார்த்திகேயனின் மகளா இது... ஆள் அடையாளமே தெரியலயே... இப்படி மாறீட்டாங்க..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் இருந்து பின்னர் வெள்ளித்திரைக்கு வந்து இன்று தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வருகின்றார்.


இருப்பினும் இடையில் இவரின் நடிப்பில் உருவான ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட் சற்று சரியத் தொடங்கியது. அந்த சமயத்தில் தான் 'டாக்டர்' திரைப்படம் வெளியானது. 

நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. அடுத்து 'டான்' திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது பிரின்ஸ் படமும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகின்றது. 


சிவகார்த்திகேயனின் குடும்ப வாழ்க்கையை பார்த்தோமாயின் 2010-ஆம் ஆண்டு இவருக்கு ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த ஜோடிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 


இந்நிலையில் இன்றைய தினம் இவரின் மகள் தனது பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றார். இதற்குப் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சிவகார்த்திகேயனும் தன்னுடைய வாழ்த்து மழையினைப் பொழிந்திருக்கின்றார்.

அதாவது தனது மகளுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு தனது வாழ்த்தினைத் தெரிவித்து இருக்கின்றார். அதில் சற்று உடல் எடை அதிகரித்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போயுள்ளார் இவரின் மகள்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் "உங்கள் மகள் இந்தளவிற்கு வளர்ந்து விட்டாரா" என கமெண்டுகளின் மூலமாக கேட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement