• May 05 2024

பப்ளிசிட்டிக்காக சிவகார்த்திகேயன் பற்றி இப்படியெல்லாம் தப்பாக பேசக்கூடாது- டி. இமானின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அவரது முதல் மனைவி

stella / 6 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான்.இவர் நடிகர் ஆரம்ப காலகட்டங்களில் சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார். அதாவது சிவகார்த்திகேயனின் மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 

அந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருக்கின்றன.இந்த நிலையில் டி. இமான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்  சிவகார்த்திகேயன் எனக்கு மிகப் பெரிய துரோகம் செய்தார். அந்த துரோகத்தை என்னால் மறக்க முடியாது. எனது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அது என்ன துரோகம் என்று வெளியில் சொல்லமாட்டேன். 


அடுத்த ஜென்மத்தில் அவர் நடிகராகவும், நான் இசையமைப்பாளராகவும் இருந்தால் மீண்டும் இணையலாம்" என்றார்.இது சிவகார்த்தகேயன் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.இந்த நிலையில் டி.இமானின் முன்னாள் மனைவி மோகினா சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார். 


சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதர், அவர் பாவம். நாங்கள் பிரிய கூடாது என நினைத்தார், எந்த ஒரு நண்பனும் பிரியகூடாது என்று தான் நினைப்பார்.இமானுக்கு விவாகரத்து விஷயத்தில் சப்போர்ட் செய்யவில்லை, எனவே தான் அவர் சிவகார்த்திகேயன் மீது இப்படிபட்ட குற்றச்சாட்டு வைத்துள்ளார்.பட வாய்ப்பு இல்லை என்பதால் இமான் இப்படியெல்லாம் பேசி பப்ளிசிட்டி தேடிக் கொள்கிறார் என கூறியுளளார்.


Advertisement

Advertisement

Advertisement